உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை துவக்கம்

வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நாளை துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகள் நாளை துவங்குகிறது. மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அவதாரமான வீரக்கல் ஸ்ரீ சவுடம்மன் கோயில் 28 ஆண்டுகளுக்குப்பின் ஒரு கோடி ரூபாய் செலவில் கோபுர சிலைகள், உள் பிரகார மண்டபங்கள், விநாயகர், சிவன் சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டு உள் ளன. துவாரக சக்திகள் புனரோதனம் செய்யப்பட்டு உள்ளது. நாளை காலை 4.30 மணிக்கு தீர்த்தங்கள் அழைத்து வரப்படுகிறது. 5.30 மணி முதல் 11 மணி வரை எஜமான,ப்ராஹ்மணா,தேவதா அனுக்ஞைகள்,விநாயகர் பூஜை,நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மாலை 5 மணி முதல் 10 மணி வரை கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு ஆசார்யாள் விஷேச சந்தி, பாவனாபிஷேகத்துடன் இரண்டாம் கால யாக பூஜை, 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. ஜூன் 29 வெள்ளியன்று கும்பாபிஷேகம் மாநில ஒக்கலிகர் சங்க கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமையில் நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திண்டுக்கல் டவுன்,செம்பட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் அன்னதானம்,11 மணி முதல் வீரமணிராஜூ குழுவினர் இறை இசை நிகழ்ச்சி நடக்கிறது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கல்யாணசுந்தரம் குருக்கள் தலைமையில் மூன்று நாட்களும் யாகசாலை பூஜை நேரங்களில் வேத, சிவாகம,திருமறை பாராயணங்கள் நடைபெறும். அறங்காவலர் குழு தலைவர் காந்திராஜன், சங்க தலைவர் காளியாயி(எ) ராமசாமி, அறங்காவலர்கள் இளங்கோவன், சவடமுத்து, சவடப்பன், செயலாளர் வேல்முருகன், கவுரவ செயலாளர் எஸ்.சவடமுத்து, பொருளாளர் நடராஜன், துணை தலைவர் வைரவசாமி,துணை செயலாளர் பழனிக்குமார், சங்க ஆடிட்டர் முத்துச்சாமி, ஆசிரியர் சுந்தர பாண்டியன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !