கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு வளையல் அலங்காரம்!
ADDED :4872 days ago
கரூர்: கரூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஆரிய வைஸ்ய சங்கம் சார்பில் சிறப்பு வளையல் அங்கார பூஜை நடந்தது.பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடந்து வருகிறது. அதையொட்டி அம்மனுக்கு பல்வேறு வண்ணங்களில் சிறப்பு வளையல் அலங்கார பூஜை நடந்தது. பிறகு நடந்த மஹா தீபாராதனை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது.ஏற்பாடுகளை ஆரிய வைஸ்ய சங்கத்தினர் செய்திருந்தனர்.