உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விஜர்சனம்

புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விஜர்சனம்

 புதுச்சேரி : புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி மூன்றாம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்தனர்.நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது.புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபடலாம் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதையடுத்து, புதுச்சேரி யில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.மூன்றாம் நாளான நேற்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நேற்று கடல் மற்றும் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்தனர். பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குறைந்தளவே கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.நேற்று காலை முதல் நோனாங்குப்பம் சுண்ணாம்பு ஆறு, அரியாங்குபம் ஆகிய ஆற்று பாலத் தின் மீது விநாயகர் சிலைகளை வைத்து சூடம் ஏற்றி வழிபட்டு ஆற்றில் விஜர்சனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !