எங்கும் நிறைந்த கடவுள்
ADDED :1517 days ago
வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு விநாயகருக்கு உண்டு. ‘அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் கடவுள்’ என்ற பாடலுக்கு உதாரணமானவர் இவர். ஆளே இல்லாத கிராமத்தில் கூட அரசமரத்தடி விநாயகர் கோயில் இருக்கும். மழை, வெயிலை பொருட்படுத்தாமல் வெட்ட வெளியில் இருப்பார். எங்கு சென்றாலும் விநாயகர் தரிசனம் கிடைக்கும். சிறிதளவு அருகம்புல்லால் அர்ச்சனை செய்தால் போதும் மனம் குளிர்ந்து அருள்புரிவார்.