பால கணபதியின் பிள்ளை விளையாட்டு
ADDED :1592 days ago
ஒருமுறை சிவன் மீது பார்வதிக்கு கோபம் வந்தது. கோபம் தணிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மவுனமாக இருந்தாள் பார்வதி. மனைவியின் பொய்க் கோபத்தை(ஊடல்) உணர்ந்த சிவன் தன்னை ஏற்கும்படி அவளின் காலில் விழ முயன்றார். அப்போது அங்கு வந்த பால கணபதி தந்தையின் தலையில் இருந்த மூன்றாம் பிறையை துதிக்கையால் இழுக்க முயன்றார். இதைக் கண்ட சிவன் அவனை அணைக்க முயன்றார். அதே போல பார்வதியும் செய்ய முயன்றாள். இருவரது கைகளும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டன. பாலகணபதியின் விளையாட்டால் சந்தோஷம் பிறந்தது.