அரைச்ச சந்தனம் மணக்கும் பாதம்
ADDED :1591 days ago
‘சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதம்’ என்பது அவ்வையார் பாடிய விநாயகர் அகவலின் முதல் வரி. ‘களபம்’ என்பதற்கு ‘குட்டி யானை’ என்பது பொருள். பார்ப்பதற்கு குட்டி யானையாக இருக்கும் விநாயகரை வழிபட்டால், பெரிய செயல்களையும் எளிதாக சாதிக்கும் வல்லமை உண்டாகும். காஞ்சி மஹாபெரியவர் இதற்கு வேறொரு விளக்கமும் சொல்வார். சீதக் களபம் என்பதற்கு ‘குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த குளிர்ந்த சந்தன கலவையை பாதங்களில் பூசியவர் விநாயகர்’ என்பதே அது.