விநாயகர் சிலையில் கழுத்தில் சுற்றிய பாம்பு: பக்தர்கள் பரவசம்
ADDED :1492 days ago
தாவணகரே: தாவணகரே அருகே உள்ள கைதாளா கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம், இந்த சிலையின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் நாகப்பாம்பு் ஒன்று சுற்றி கொண்டது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பாம்புக்கும் சேர்த்து பூஜை செய்தனர். தகவலறிந்த அக்கம் பக்கத்து கிராமத்தினர், கூட்டம் கூட்ட மாக வந்து பார்த்து சென்றனர். பல மணி நேரத்திற்கு பின், பாம்பு அங்கிருந்து சென்றது.