உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் பகுதிகளில் சஷ்டி விழா

ப.வேலூர் பகுதிகளில் சஷ்டி விழா


ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !