அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதார கவுரி விரத பூஜை துவக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதார கவுரி விரத சிறப்பு வழிபாடு துவங்கியது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சிவனும் பார்வதியும் ஒரு உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பார்வதிதேவி சிவபெருமானிடம், 21 நாட்கள் விரதம் இருந்து இடப்பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்ததாக ஐதீகம். இதற்கான, 21 நாள் தபசு விழா நிகழ்ச்சி துவங்கி சிறப்பு அபி ?ஷக பூஜைகள் நடக்கும். 21நாட்களும், 21 விதமான பட்சணங்கள் படையலிட்டு வழிபாடு செய்யப்படும். இதற்கான சிறப்பு வழிபாடு நேற்று துவங்கியது. புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்தினம், 21வது நாள் சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்சி தந்து இடப்பாகம் அருளினார். சிவபெருமானாக ஆவாகணம் செய்யப்பட்டு, தினமும் பூஜை செய்யபட்டு வரும் கலசதீர்த்தம், வரலாற்று பெருமை கொண்ட கடலை தின்ற நந்தீஸ்வரருக்கு தீர்த்தாபிஷேகம் செய்யப்படும். திருமணத்தடை நீங்குதல்,குடும்ப ஒற்றுமை மேம்படுதல் என பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.