உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு

குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு

பாலக்காடு: கேரளா மாநிலம் குருவாயூர் கோவிலில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தியை தேர்ந்தெடுப்பது வழக்கம். வரும் ஆறு மாதங்களுக்கு மேல்சாந்தியாக, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாசன், 52, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷொர்ணுார் சுடுவாலத்துார் சிவன் கோவில் தந்திரியான இவர், 26 முறை குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இம்முறை தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !