அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தோசைக்கு தரச்சான்று
ADDED :1540 days ago
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தோசை உள்ளிட்ட பிரசாதங்கள் பிரசித்தி பெற்றவை. இக்கோயில் மற்றும் சோலைமலை முருகன் கோயில் பிரசாதங்கள், தயாராகும் இடங்களை மதுரை மாவட்ட கோயில்களில் முதன்முறையாக உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரமான கடவுள் பிரசாதம் என தரச்சான்று வழங்கினர். கலெக்டர் அனீஷ்சேகர் வழங்க, கோயில் துணைகமிஷனர் அனிதா, கண்காணிப்பாளர் நாராயணி பெற்றுக்கொண்டனர்.