அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேதாரகெளரி விரத வழிபாடு
ADDED :1581 days ago
திருச்செங்கோடு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதாரகெளரி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பக்தர்கள் இல்லாத நிலையில் கேதாரகெளரி விரத வழிபாடு மூன்றாம் நாளான நேற்று பார்வதி தேவி, பரமேஸ்வரனுக்கு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் அருள்பாலித்தனர்.