புரட்டாசி சனி : சஞ்சீவராயப் பெருமாளுக்கு பாலபிஷேகம்
ADDED :1489 days ago
உடுமலை : உடுமலை கரட்டுமடம் ஸ்ரீ சஞ்சீவராயப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஜனகவல்லி, செளந்தரவல்லி தயார் சமேத பெருமாளுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.