உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி  சிவாலயபுரம்  அருள்மிகு ஸ்ரீ  கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில், இன்று 18.09.2021, புரட்டாசி மாதம் 2-ம் நாள்,  சனிக்கிழமை, சனி மஹா தேய்பிறை பிரதோஷ வழிபாடு, மற்றும் சிறப்பு ஆன்மிக கவியரங்கம் நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு தேவாரத் தமிழும் செந்தமிழ் உறவும் என்ற தலைப்பில் சிறப்பு ஆன்மிக கவியரங்கம், கவிஞர் பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலமும், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளையும் இணைந்து நடத்தியது.  கவிஞர் பொற்கை பாண்டியன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பல்வேறு தலைப்பில் கவி பாடினார்கள் மூத்த பத்திரிகையாளர் திரு. ஜெயக்குமார் தலைமையில்,சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் காவல் துறை அதிகாரி திரு.குமரவேல், ஹோட்டல் டெம்பிள் சிட்டி திரு. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக  சுவாமிக்கும்,  நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.  பக்தர்கள் சிவ புராணம், கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்தனர். இன்றைய பூஜை இறைப் பணியில் மேலூரை சேர்ந்த திரு. மணி - இளமதி குடும்பத்தினர்கள். பக்தர்களுக்கு  புளியோதரை, சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் ,  சங்கர  நாராயணர் கோயில் கல்வி  அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வம், சுந்தரராஜன், தேவதாஸ் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !