காமாட்சி அம்மன் கோயிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
ADDED :1551 days ago
பரமக்குடி: பரமக்குடி சின்னக்கடை தெரு காமாட்சி அம்மன் கோயிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி காமாட்சி அம்மன், மதுரைவீரன் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. முன்னதாக கணபதிஹோமம், தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடப்பட்டது. மேலும் விஸ்வகர்ம ஜெயந்தியையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அப்போது சிறுவர்களின் பக்தி பாடல் இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டது. வட்டார பொற்கொல்லர் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் கருணைபுரி சிவனடியார் கூட்டத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.