22 அடி உயர மாதா சிலை: குன்னூர் தேவாலயத்தில் திறப்பு
ADDED :1477 days ago
குன்னுார்:குன்னுார் அந்தோணியார் தேவாலயத்தில், 22 அடி உயர மாதா சிலை திறக்கப்பட்டது. குன்னுாரில், பழமை வாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயத்தில், மாவட்டத்தில் முதல் முறையாக, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 22 அடி உயரம் கொண்ட மாதா சிலை திறக்கப்பட்டது. மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ், அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். மாநிலத்தில் உயரமான இந்த சிலை திறப்பு விழா, கொரோனா விதிமுறைகள் காரணமாக எளிமையான முறையில் நடந்தது.