சேதமடைந்த ரோட்டால் பக்தர்கள் அவதி
ADDED :1477 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு சேதமடைந்து தண்ணீர் தேங்குதல் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆன்மிக தலமாக குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளது. நாள்தோறும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். செட்டியார் பூங்கா |குறிஞ்சி ஆண்டவர் கோயில் இடையே ரோடு சேதமடைந்தும், பேவர்பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டு, குழியுமாக இருப்பதால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கோயிலின் நுழைவாயில் முன் இதுபோன்ற நிலையால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பள்ளத்தை தாண்டிச் செல்ல அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க வேண்டும்.