உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் நிலத்தில் கலெக்டர் அலுலகம் கட்டத்தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தில் கலெக்டர் அலுலகம் கட்டத்தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட உயர்நீதிமன்றம் அளித்திருந்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட தடை விதிக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும் அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறி, அவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. பொதுநல நோக்கம் என்பதால் கோயில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து ரங்கராஜன் நரசிம்மன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.அப்துல்நசீர் மற்றும் கிருஷ்முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !