திருக்காமீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED :1446 days ago
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி துவங்கியது.மத்திய அரசின் சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வில்லியனுார் கோகிலாம்பாள் சமேத திருக்காமீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் விடுபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளை மாநில பொதுப்பணித் துறை சார்பில், ரூ.5.54 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. திருக்காமீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணியை, அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தனர். பொதுப்பணித் துறை செயலர் விக்ராந்த் ராஜா, சுற்றுலாத் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சாய்சுப்ரமணியன், இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.