உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையில் ஐந்து தரிசனம்

ஏழுமலையில் ஐந்து தரிசனம்


திருப்பதியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார். மூலவர், மலையப்பர், உக்ர சீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர் என்னும் இவர்களை ‘பஞ்ச பேரர்கள்’ என்பர்.
* மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே கோவிலின் பிரதான மூர்த்தி.
* ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருள்பவர் உற்ஸவர் மலையப்பர். தினமும் இவர் கல்யாண கோலத்தில் காட்சியளிப்பவர்.  ‘மலைக்கினிய பெருமாள்’ என்றும் இவருக்கு பெயருண்டு.  
* உக்ர சீனிவாசர் ஆண்டுக்கொரு முறை கார்த்திகை துவாதசியன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் பவனி வருவார். இவரை மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசிக்க முடியாது.
* போக சீனிவாசர் வெள்ளியால் செய்யப்பட்டவர். இவர் அன்றாட அபிஷேகத்திற்காக  எழுந்தருள்வார்.
* கோவிலில் நடக்கும் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிக்கும் போது அதை ஏற்பவர் கொலுவு சீனிவாசர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !