கற்பக விநாயகர் கோயிலில் 1ம் தேதி வருஷாபிஷேகம்
                              ADDED :4874 days ago 
                            
                          
                          
தென்காசி:தென்காசி தெற்கு மாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் வரும் ஜூலை 1ம் தேதி வருஷாபிஷேகம் நடக்கிறது.தென்காசி தெற்கு மாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. வரும் ஜூலை 1ம் தேதி 9வது வருஷாபிஷேக விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது.காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அபிஷேகம், மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் சிறப்பு அர்ச்சனை, இரவு மகா தீபாராதனை நடக்கிறது.