சிவசாய் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :1485 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவசாய் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஸ்ரீ சிவ சாய் கிருஷ்ணர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவராக பாணலிங்கம், சாய்பாபா, ஸ்ரீகிருஷ்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பிரகார தெய்வங்களாக அங்காளம்மன், பாலசுப்பிரமணியர், ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ துர்கா, ஸ்ரீ திருநீலகண்டர், ஸ்ரீ லிங்கோத்பவர் மற்றும் நவகிரக சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி திருநங்கை விஜயம்மா செய்து இருந்தார்.