பழநி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
ADDED :1523 days ago
பழநி: பழநி நகரில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பழனி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பாலசமுத்திரம் கரட்டில் உள்ள ரங்கநாதசுவாமி பாதம், ராமநாத நகரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.