மாதக் கார்த்திகை: கோயில் முன் விளக்கேற்றி பிரார்த்தனை
ADDED :1473 days ago
பழநி: பழநியில் மாதக் கார்த்திகையை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறி முறைப்படி பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் பழநி மலைக் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் பக்தர்கள் சிலர் திருஆவினன்குடி, பாத விநாயகர் கோயில் வாயிலில் நின்று வழிபட்டனர். சிலர் திருஆவினன்குடி கோயில் முன் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர்.