உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி சிவன் கோயில் உண்டியல் 6 மாதத்திற்கு பின் திறப்பு!

தூத்துக்குடி சிவன் கோயில் உண்டியல் 6 மாதத்திற்கு பின் திறப்பு!

தூத்துக்குடி:தூத்துக்குடி சிவன் கோயிலில் இதுவரை இல்லாத அளவிற்கு உண்டியல் வசூல் 6 லட்சத்து 50 ஆயிரம் வந்துள்ளது. பக்தர்களின் வருகை கோயிலுக்கு அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயிலான சங்கரராமேஸ்வரர் (சிவன்) கோயிலில் 6 மாதத்திற்கு ஒருமுறை கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோயில் உண்டியல் திறக்கப்பட்டன. அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஆய்வாளர் நயினார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டன.இதில் மொத்தம் 6 லட்சத்து 47 ஆயிரத்து 380 ரூபாய் ரொக்கப்பணம், 12 கிராம் தங்கம், வெள்ளி 79 கிராம் இருந்தது. இந்த அளவிற்கு அதிகமாக உண்டியல் பணம் இருந்தது அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை இந்த அளவிற்கு உண்டியல் காணிக்கை பணம் வந்தது கிடையாது.கடந்த 6 மாதத்திற்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்ட போது மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரம் மட்டுமே இருந்தது. தற்போது 2 லட்ச ரூபாய் உண்டியல் பணம் அதிகரித்திருப்பது கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பது தான் காரணம் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !