தேய்பிறை அஷ்டமி: வடுகநாத சுவாமி கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1494 days ago
பல்லடம்: மலையம்பாளையம் வடுகநாத சுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
பல்லடம், கணபதிபாளையம் அடுத்த மலையம்பாளையத்தில் ஸ்ரீவடுகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, காலபைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாளில், இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். நேற்று, புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள், பூசணிக்காய் விளக்கு ஏற்றி வைத்து பைரவரை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.