வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :4875 days ago
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணப்பட்டது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. நேற்று கோவில் செயல்அலுவலர் நாகையா தலைமையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் எண்ணப்பட்ட உண்டியலில் 65 ஆயிரத்து 980 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.