உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் ருக்மணி கல்யாணம்

நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் ருக்மணி கல்யாணம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா செப்.,25 துவங்கி ஏழு நாட்கள் நடந்தது. தினமும் மாலை ஸ்ரீமத்பாகதை புராணம், நாமமகிமை, கஜேந்திர மோட்சம், நவ பக்தி, உத்தவ கீதை உள்ளிட்ட தலைப்புகளில் ஸ்ரீரங்கம் திவ்யகிருஷ்ணதாஸ் சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். இன்று காலை ருக்மணி சுவாமி கல்யாணம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் நவநீத கோபாலகண்ணன் கிராம மரியாதைகாரர்கள், பாகவதோத்தமர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !