உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி: பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி சனி: பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோவிட் தொற்று காரணமாக, கோயிலுக்குள் பக்தர்கள் சென்று, வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள், பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் அதிகாலை நடை திறந்து, அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய அளவிலான கோயில்களில், சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து, இறைவனை வழிபடவும், பெரிய அளவிலான கோயில்களில் கோயில் வளாகத்துக்கு வெளியே நின்று, பக்தர்கள் வழிபடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !