உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா

கடலூர்: பில்லாலி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.கடலூர் அடுத்த பில்லாலி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 69ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நாளை (29ம் தேதி) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினசரி இரவு சுவாமி வீதியுலாவும், 3ம் தேதி இரவு பக்காசூரனுக்கு சோறு போடுதலும், 4ம் தேதி காலை வில் வளைத்தலும், தொடர்ந்து அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு ”வாமி வீதியுலா நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி கரக உற்சவமும், 6ம் தேதி மாலை தீமிதி உற்சவமும், 7ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !