படவட்டம்மன் கோவிலில் நாளை திருவிளக்கு பூஜை
ADDED :4874 days ago
கடலூர்: புதுப்பாளையம் படவட்டம்மன் கோவிலில் நாகதேவதை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நடக்கிறது.கடலூர், புதுப்பாளையத்தில் உள்ள படவட்டம்மன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நாகதேவதை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை (29ம் தேதி) கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு பூர்த்தி பூஜை நடக்கிறது.அதனையொட்டி அன்று காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் 8.15 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. மாலை விளக்கு பூஜை நடக்கிறது.