உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில்குளத்தை சீரமைக்க கோரிக்கை

மாரியம்மன் கோவில்குளத்தை சீரமைக்க கோரிக்கை

செஞ்சி:செஞ்சியில் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள குளத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகிலும், மாரியம்மன் கோவில் எதிரிலும் உள்ள குளத்தை சீரமைப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகளை துவக்கினர். முதல் கட்டமாக மேற்கு பக்கம் உள்ள படிக்கட்டுக்களை பொக்லைன் மூலம் பிரித்து எடுத்தனர்.இந்த பணிகள் முறைப்படி நடக்க வில்லை எனக்கூறி அப்போது, இருந்த அ.தி.மு.க., கவுன் சிலர்கள் தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து துவங்கிய வேலையிலும் படிக்கட்டுக்களை சரி செய்யாமல் மற்ற பகுதிகளை சரி செய்தனர். தற்போது குளத்தின் எதிரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் விரைவில் கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர்.இந்நிலையில் கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தின் படிகளை  சரிசெய்யாமல் சிதிலமாக இருப்பது இப்பகுதி மக்களுக்கு குறையாக உள்ளது. குளத்தின் படிக்கெட்டுக்களை  விரைவாக சரி செய்ய வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !