கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1471 days ago
சூலூர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
சூலூர் அடுத்த கரவளி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி மாதத்தை ஒட்டி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை ஒட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். பூஜையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.