உறவுகளை அரவணைப்போம்
ADDED :1561 days ago
நமது இன்ப, துன்பங்களில் கலந்து கொள்பவர்கள்தான் உறவினர்கள். அப்படிப்பட்டவர்களின் அவசியத்தை உணராமல் பலர் வாழ்கிறார்கள். உறவுகளே வேண்டாம் என்று யாரும் தனியாக வாழ்ந்துவிட முடியாது. சில நேரங்களில் உறவுகள் சுமையாக இருந்தாலும், அதுதான் ஒருவரின் பெரிய பலமாகும்.
‘உறவுகளால் நமக்கு என்ன பயன் இருக்கிறது. அவர்களால் சிக்கல்தானே ஏற்படும்’ என சிலர் நினைக்கலாம். அப்படி நீங்கள் நினைக்கிறீர்களா... உங்கள் பார்வையை மாற்றுங்கள்.
இறைவனின் சிறப்பு பெயர்களில் ஒன்று ‘ரஹ்மான்’. இதில் அடங்கியுள்ள ‘ரஹம்’ என்ற வேர் சொல்லுக்கு ‘உறவு’ என்று பொருள். இறைவனோடு நெருக்கமாக நினைப்பவர்கள் உறவினரோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.