பழநி மலைக் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED :1543 days ago
பழநி: பழநி மலைகோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகம், தீயணைப்புத்துறை இணைந்து நேற்று மலைக்கோயில் மண்டபத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயிலில் பணி புரியும் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். தீ விபத்தை ஏற்படாதவண்ணம் தடுக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆயில், மின்சாரம், சிலிண்டர் ஆகியவற்றில் தீப்பிடித்தால் அவற்றை அணைக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தீப்பற்றி எரியும் போது தீயணைப்பான்கள் கையாளும் முறைகளை குறித்து விளக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் உட்பட தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.