உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுாரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து

மேல்மலையனுாரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து

 விழுப்புரம் : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை 6ம் தேதி அமாவாசையன்று பக்தர்கள் தரிசனம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு: கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு நாளை 6ம் தேதி அமாவாசையன்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !