கோகர்ணா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :1494 days ago
உத்தரகன்னடா: உத்தரகன்னடா கோகர்ணாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மகாபலேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் கொரோனா ஊரடங்கால் மார்ச் முதல் மூ டப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வால் மூன்று மாதமாக உள்ளூர் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வெளி மாநில, மாவட்ட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் , நேற்று முதல் வெளியூர், வெளி மாநில பக்தர்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.