வடலுாரில் வள்ளலாரின் 199வது அவதார தின விழா
ADDED :1485 days ago
வடலுார்:வடலுாரில் வள்ளலாரின் 199வது அவதார தின விழா நடந்தது.
கடலுார் மாவட்டம், வடலுார் அருகே உள்ள மருதுார் கிராமத்தில் 5.10.1823 அன்று ராமலிங்க அடிகளார் பிறந்தார். அவர், சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கி, வடலுாரில் சத்திய ஞான சபை, தரும சாலையை தொடங்கினார். வள்ளலாரின் 199 வது அவதார தின விழா வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கொண்டாடப்பட்டது. காலை 5 மணி அளவில் அகவல் பாராயணம் நடந்தது. பின், காலை 6:30 மணியளவில் தரும சாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. வள்ளலார் அவதரித்த மருதுார் கிராமத்திலும் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. இரு இடங்களிலும் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தெய்வ நிலைய செயல் அலுவலர்(பொ) ராஜா சரவணக்குமார் செய்திருந்தார். சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.