வள்ளலார் அவதார தினம்
ADDED :1430 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வள்ளலார் 198ம் ஆண்டு அவதார தினம் கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். சன்மார்க்க இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் முத்துக் கருப்பன் வரவேற்றார்.யோகா ஆசிரியை விஜயலட்சுமி சன்மார்க்க கொடியேற்றினார். பூட்டை டாக்டர் நாச்சியப்பன் தலைமையில் அகவல் படித்து பிரார்த்திக்கப்பட்டது. சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கார்த்திகேயன் நன்றி கூறினார்.