தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் விழா
ADDED :1554 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி இரண்டாம் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திருமதி விஜய ஸ்ரீராமனும் செல்வி ஸ்ரீரஞ்சனியும் சிறப்பாகப் பாடினார்கள். ஆரதிக்குப் பிறகு கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜின் சீடர்களின் நாமசங்கீர்த்தனம் திவ்யமாக நடந்தது. கிராம மையத்தில் மூத்த பக்தரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான திரு பாலகுரு அவர்கள் துர்கா பூஜையில் திருமூவர் வரலாறு பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். திருமதி விஜயஸ்ரீ ராமன் பாடினார். செல்வி ஸ்ரீரஞ்சனி குழந்தைகளை மிகவும் உற்சாகப்படுத்தி பக்தியுடன் ஆடினார்.