நவராத்திரி விழா துவக்கம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஒவ்வொறு ஆண்டும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக் கொலுவில் சுமார் 2 ஆயித்து 500 பொம்மைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. வநராத்திரி துவங்கும் 7 ம் தேதி முதல் 14 ம் தேதி தினமும் இரவு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். கொலுவை காணும் வகையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள். இதற்கான ஏற்பாட்டை பொது தீக்ஷிதர்கள் செய்துள்ளனர். சுமார் 21 அடி அகலமும், 21 அடி நீளமும், 21அடி உயரமும் 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கொளு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். ஒவ்வொறு ஆண்டும் நடைபெறும் கொளுவிற்காக பக்தர்களும் பொம்மைகள் புதிய பொம்மைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.