உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி கொலு

திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி கொலு

திருப்புத்துார்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நவராத்திரி உத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும். அக்.,6 ல் உத்ஸவம் துவங்கியது. தினசரி காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனைகள் நடைபெறுகிறது.  இரவு 6:30 மணிக்கு உற்சவ அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும். நேற்று வஞ்சுளவள்ளி அலங்காரத்திலும், இன்று ஸ்ரீ கூடலழகர், நாளை ஸ்ரீராமஅவதாரத்திலும் உற்சவ அம்பாள் அலங்காரத்தில் அருள்பாலிப்பார். உத்ஸவத்தை முன்னிட்டு கோயிலில் கொலு அலங்காரம் அமைக்கப்பட்டு அதில் உற்ஸவ அம்பாள் எழுந்தருளியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !