உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பதி பிரம்மோற்ஸவ விழா ஐந்தாம் நாளில்,ஏழுமலையானுக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பிரமாண்ட மாலை அணிவிக்க சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். இதன்பின் மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் கூடையில் வைக்கப்பட்டு ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் மாட வீதிகளை சுற்றி வந்தது. தொடர்ந்து கார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுரு, செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம்கோ நிறுவனம் செய்திருந்தது. மாலையுடன் கூடிய மங்கல பொருட்கள் இன்று திருப்பதி கோயிலில் ஒப்படைக்கப்பட்டு நாளை (அக்.11) ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !