ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் அகற்றம்
ADDED :1500 days ago
ராமேஸ்வரம்: தினமலர் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன் மண்டபத்தில் இருந்த உண்டியலை அகற்றி உள்ளே வைத்தனர்.வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை. ஆனால் கோயில் வருவாய் குறையாமல் இருக்க ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தலாம் என அறிவித்தது. மேலும் அக்., 9ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளே இருந்த உண்டியலை கிழக்கு நுழைவு வாசல் முன் மண்டபத்தில் வைத்தனர்.இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து இன்று அதிகாலை அவசர அவசரமாக உண்டியலை அகற்றி வழக்கமாக இருக்கும் நந்தி மண்டபத்தில் வைத்தனர்.