5 நாள் தடைக்கு பின் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1562 days ago
ராமேஸ்வரம்: 5 நாள் தடைக்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி அமாவாசை, வழக்கமான தமிழக அரசின் 3 நாள் தடை என ராமேஸ்வரம் கோயிலில் கடந்த வாரத்தில் இரு நாட்கள் தவிர (திங்கள், வியாழன்) 5 நாளும் பக்தர்கள் தரிசிக்க தடை விதித்தனர். இதன்பின் இன்று கோயில் திறந்ததும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.