உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் உருவப்பட ஸ்டிக்கர் விநியோகம்

அயோத்தி ராமர் உருவப்பட ஸ்டிக்கர் விநியோகம்

மேட்டுப்பாளையம்: அயோத்தி ராமர் கோவில் உருவப்பட ஸ்டிக்கர், ஹிந்துக்களுக்கு வழங்குவது என, முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னணி சார்பில், பயிற்சி முகாம் நடந்தது. கோவை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் மனோகரன், நகர தலைவர் காளியப்பன், பொது செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாலாஜி, துணைத் தலைவர் ரவி ஆகியோர் பேசினர். பயிற்சி முகாமில், இயக்கத்தின் வேலைகளை எவ்வாறு செய்வது. அனைத்து இந்துக்களையும் இணைத்து, எவ்வாறு வேலை செய்வது. சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு, அயோத்தி ராமர் கோவிலின் உருவப்படம் போட்ட, ஸ்டிக்கர் ஹிந்து குடும்பங்களுக்கு வழங்குவது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !