சரஸ்வதி பூஜை முறை
ADDED :1792 days ago
பூஜையறையை சுத்தப்படுத்தி சரஸ்வதி படத்தை வெள்ளை தாமரை அல்லது வெள்ளை நிற பூக்களால் அலங்கரியுங்கள். சரஸ்வதியின் அருகில் பசுசாணம் அல்லது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றுங்கள். ஒருபுறம் குழந்தைகளின் பாடப்புத்தகங்களையும், மறுபுறம் சுண்டல், பொங்கல், அவல், பொரி, கடலை, சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களையும் வையுங்கள். சரஸ்வதி போற்றி, அந்தாதி, சகலகலாவல்லி மாலை பாடல்களைப் பாடிய பின் தீபாராதனை காட்டி வழிபடுங்கள்.