உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி அலங்காரத்தில் தஞ்சாவூர் பெரியநாயகி அம்மன் அருள்பாலிப்பு

சரஸ்வதி அலங்காரத்தில் தஞ்சாவூர் பெரியநாயகி அம்மன் அருள்பாலிப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் நவராத்திரி விழாவில் இன்று மூலவர் பெரியநாயகி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். விழாவில் அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் 7ம் நாளான இன்று (அக்.,12) மூலவர் பெரியநாயகி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !