உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாளியூர் திப்பாதேவி கோயில் கும்பாபிஷேகம்

தாளியூர் திப்பாதேவி கோயில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள தாளியூரில் திப்பா தேவி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.


கோயில் புனரமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி, லட்சுமி ஹோமங்கள் நடந்தன. வாஸ்து சாந்தி, முளைப்பாரி தீர்த்த குடங்கள் அழைத்து வருதல், கலசங்கள் யாகசாலை புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, பூஜைகள் செய்து, கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர், முருகர் மற்றும் திப்பா தேவி தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், தாளியூர், பன்னீர்மடை, கணுவாய், தோலம் பாளையம், சின்னதடாகம், வீரபாண்டி புதூர், காரமடை, கரடிமடை, மத்தம்பாளையம், பூச்சியூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !