நன்மை தருவார் கோயிலில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன்
ADDED :1659 days ago
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி 7ம் நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்1431 பசலி நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. நவராத்திரி 7ம் நாளில் (அக்.13) மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.